மின் அஞ்சல் முலமாக நாட் குறிப்பு பதிவு
Category: நிகழ்வு
-
12வது NCO பார்த்தா பள்ளியில் மூன்றாவது இடம்
http://www.sofworld.org/12th-nco-result/TN115502026
இது நடந்தது செப் 27 2012, அடுத்த நாள் நான் வீட்டில் விடைகளை கேட்ட பொழுது கேட்கப்பட்ட35 வினாவில் 21 க்கு சரியாக விடை சொன்னான்.
எனக்கு அவன் இவற்றை முயற்ச்சி செய்ய வேண்டுமே தவிர நிறைய மதிப்பெண் பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கட்டாயபடுத்தவில்லை.
ஆனால் உண்மையாகவே நன்றாக அவனாகவே முன்வந்து முயற்ச்சித்தான்.
[pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTgwMzQ1NzIwNjgwMTc2MDI4OT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]
-
திருவரங்கன் உலா
ராதா திருவரங்கன் உலா புத்தகத்தை பற்றி சொன்ன போது நானும் அதை படிக்க ஆர்வம் கொண்டு இனையதளத்தில் உடனே வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.
எற்கனவே ஸ்ரீ ஸ்ரீ அண்ணா மூலமும் பொன்னியின் செல்வன் குழுமம் மூலமும் தெரிந்து இருந்தாலும் முழுவதும் தெரியாது.
படிக்க படிக்க ஆர்வம், சோகம், வியப்பு, பெருமை எல்லாம் ஒரு சேர உணர்ந்தேன்.
அரங்கனை காப்பாற்ற 47 வருடங்கள் அவருடைய பக்தர்கள் பட்ட பாடு, துருக்கியர்கள் செய்த கொடுமைகள் அதனால் எற்பட்ட கலாசார சீர் கேடுகள், அந்த நாளைய வரலாறு நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதைபடி திருவரங்கம் அரங்கன் வன வாசத்தின் பொழுது சீரழிக்கபட்டு 47 வருடம் முறையான பூஜை இல்லாமல் மறுபடி புத்துயிர் பெற்று இன்று பார்க்கும் பொழுது, சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் நடந்ததிற்கான அறிகுறி இல்லை. அவருடைய ஆட்சி இன்றும் தொடர்கிறது.
ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சொன்னது போல், அரங்கன் 47 வருடம் வன வாசம் போன காரணம் என்ன? அன்றைய அந்தணர்களுடைய பக்தி குறைவு மற்றும் அனாசாரம் தானா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
அரங்கன் தான் புரியவைக்க வேண்டும்.
படித்து முடித்தவுடன் உடனே பார்த்து “உன்னுடைய லீலை புரியவில்லை” என்று விண்ணப்பித்தேன்.
-
புத்தகம் – ஆரம்பம்
புத்தகம் – ஒரு நண்பன்.
சிறுவயது முதல் நிறைய புத்தகம் படித்திருக்கிறேன், கணிணி சகவாசம் ஆர்ம்பித்த பிறகு மிகவும் குறைந்துவிட்டது.
ஆரம்ப கால நினைவுகள் கோகுலம் மற்றும் பூந்தளிர் சிறுவர் மாத இதழ் மூலம் அறிமுகம். அதில் வரும் படக்கதைகள் சில நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதில் வரும் குரங்கு கபிஷ் கதைகள் வரைபடங்கள் தெளிவாகவே ஞாபகம் இருக்கிறது.
மற்றும் இரண்டு கதைகள் மிகத்தெளிவாக நினைவிருக்கிறது.
ஒன்று, ஒரு பூதம் நாய் வாலை நிமிர்த்த முடியாமல் தோற்ற கதை, ஒருவனுக்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது, ஒரு பூதம் அவனுக்கு கிடைக்கும், அது அவன் சொல்லும் வேலை எல்லாவற்றையும் செய்ய ஒப்பு கொள்ளும், ஆனால் ஒரு நிபந்த்னை, அதற்கு வேலை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் அவனை தின்றுவிடும். முதலில் ஒப்புக் கொள்ளும் அவன் இறுதியில் அதற்கு வேலை கொடுக்கமுடியாமல் பயப்படும் பொழுதும், அவனுடை மனைவியோ மகளோ நாய் வாலை நிமிர்த்த சொல்ல அது முயற்ச்சித்து முடியாமால் தோல்வி அடைந்த்து ஒடிவிடும்.
ஒரு கிராமத்தில் ஒரு அரக்கன் நினைத்த நேரம் வந்து கிடைத்தவரை கொன்று தின்றுவிடுவான், இதை தவிர்க்க அந்த ஊர் மக்கள் அந்த் அர்க்கனிடம் ஒரு ஒப்பந்தம் செய்து, அவன் வருவதற்கு பதில் தாங்களே முறை அமைத்து வீட்டிற்கு ஒருவரை உணவோடு அனுப்பி வந்தார்கள். இப்படி இருக்கும் பொழது ஒரு நாள் ஒரு அம்மாவும் அவளுடைய ஐந்து மகன்களும் ஒரு வீட்டில் விருந்தினராக இருப்பவருடைய முறை வந்தது, அவர்களுக்கு ஒரே மகன், அவர்களுடைய சோகத்தை அறிந்து அந்த அம்மா தன்னுடைய மகனை அனுப்ப சம்மதிக்கிறாள், அவன் சென்று அந்த உணவை சாப்பிட்டுவிட்டு அந்த் அரக்கனையும் கொன்றுவிடுவான். இது பிறகு மகாபாரத கதை என்றும், அந்த மகன் பீமன் என்றும் தெரிந்தது.
அதற்கு பிறகு ரஷ்ய சிறுவர் மாத இதழ் மிஷா (Misha), அப்பா அதற்கு சந்தாதாரராக இருந்ததால் மாதம் அதை விடாமல் படிப்பேன்.
பிறகு அண்ணா தான் காமிக்ஸ் புத்தகம் நிறைய வாங்கினான், அதை பிறகு ஒரு நூலகமாக வைக்கும் அளவுக்கு இருந்தது. இப்பவும் அந்த பழக்கம் தொடர்கிறது.
அப்பா இப்பவும் அதை “என் சொத்தை புத்தகம் வாங்கியே அழிச்சான்” என்று நகைச்சுவையாகவும் எரிச்சலாகவும் சொல்வார்.
[pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MzI5MTY1NjE0MjkzNTE4NT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]
-
விஸ்வம்பரா விஸ்வருபா
அன்பில் சுந்தரரஜனை பார்த்த பிறகு ஸ்ரீரங்கம் விஸ்வருபா அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி பயணம். வழியிலேயே விஸ்வம்பரா நிறுவனத்தின் உரிமையாளர் பாலசுப்ரமணியை ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் அருகில் பார்த்தோம்.
ராஜ கோபுரத்திலிருந்து விஸ்வருபா நோக்கி அம்மா மண்டபம் வழியாக செல்ல செல்ல ஆர்வம் அதிகமாகியது, ஆனால் அந்த் வீதியின் அகலம் ஒரு எமாற்றம், 30 அடி இருக்கும், அனால் ஆக்கிரமிப்பு மற்றும் திறந்த் கால்வாய் காரணமாக குறுகி உள்ளது.
உள்ளே சென்று பாலசுப்ரமணியை சந்தித்து அவருடன் பகுதி A மற்றும் பகுதி B ஒவ்வொரு மாடியாக ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தோம். வீடு தேர்வுக்கு முக்கியமாக கோபுர தரிசனம், மதுரகவி ஸ்வாமி நந்தவனம் மற்றும் வாஸ்து.
மதியம் உணவு நேரம் ஆனதால் கீழே இறங்கி பாலசுப்ரமணியின் மகன் மகேஷ் குமாரை சந்தித்து எங்களுடைய தேர்வு பற்றி பேசிவிட்டு, குடும்பத்துடன் உணவு இடைவெளியில் கலந்தாலோசித்து பிறகு சந்தித்து பேசுவதாக கூறி விடைபெற்றோம்.
ஸத்குரு பவனில் உணவு உண்ணும்போது எல்லொருடைய கருத்தையும் கேட்டேன்.
- ராதா – சரி
- கிருத்திகா – சரி (ஆனால் இன்னும் பள்ளிக்கரனை தான்)
- மாமா – சரி
- அம்மா – சரி
- அப்பா – முதலில் சரி, வற்புறுத்தி கேட்டபோது பிடிக்கவில்லை. அவருக்கு நான் தஞ்சாவூரில் அவர் பார்த்த வீட்டை பிடிக்கவில்லை என்பதால் கோபம், மண் சரியில்லை என்று எதோ காரணம். அடுக்குமாடி குடியிருப்பு அவருக்கு பிடிப்பதில்லை, சிறு நிலம் அதில் வீடு இருக்க வேண்டும். மாமாவுக்கும் அவருக்கும் சண்டை வந்துவிட்டது.
நான் என்னுடைய காரணங்களை பட்டியலிட்டேன். இவற்றை சொல்லும்போது எனக்கும் என்னுடைய முடிவில் ஒரு தெளிவு எற்ப்பட்டது.
- ஸ்ரீரங்க அபிமானம், கோபுர தரிசனம்.
- ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அருகில் இருக்கிறார்.
- மதுரகவி ஸ்வாமி அவர்களின் நந்தவனம்
- விஸ்வம்பரா என்ற பெயர், கிருஷ்ண சைதன்ய மஹா பிரபுவின் பெயர்.
- விஸ்வருபா என்ற பெயர், அவருடைய மூத்த சகோதரர் பெயர்.
- பண முதலீடு – ஸ்ரீரங்கம் நகரம், தஞ்சாவூர் மற்றும் சென்னையில் நகரத்திற்கு அருகில் வாங்க முடியாது
- 2வது வீட்டுக்கான வட்டிக் கடன் மூலம் வருமான வரி சேமிப்பு
- 2-3 ஆண்டுகளாக சதுர அடி விலை குறையும் என்று எதிர்பார்த்து குறையவில்லை
- ஏன் 60 லகரம்? வருமான வரி சேமிப்பு – குறைந்தது 1.5 லகரம் சேமிக்க முடியும்.
- இரண்டு புரமும் திரந்த வெளி, இன்னோரு 100 வருடங்களுக்கு அங்கு கட்டிடம் வருவதர்க்கு வாய்ப்பில்லை.
- அடுக்குமாடியில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஒரு ஆசை.
- ஒரு பிடிப்பு, அடிக்கடி வரவேண்டும் என்று தோன்றும்.
- தரமான கட்டுமானம்.
ஒரு வழியாக விளக்கம் கொடுத்து, இரண்டு வீடுகளை தேர்வு செய்து திரும்பி விஸ்வருபா சென்றோம். மறுபடி அலசல், ஒன்று நன்றாக இருந்தால், ஒன்று குறை. வசிக்கும் அறை நன்றாக இருந்தால் கோபுர தரிசனம் இருக்காது, பக்கத்து கட்டிடம் எழும்ப வாய்ப்பு, வெளிச்சம், சமையலறை, காற்றோட்டம். கடைசியாக J3 அல்லது c3 தேர்வு செய்து சென்றோம். ஆனால் J3 எற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதால் திரும்ப ஆலோசனை, J4 கடைசி மாடியாக இருந்தாலும் பரவாயில்லை, வெயில் தாக்கம் குறைவாக இருக்க வழக்கமான தட்டோடு பதிக்காமல் இக்ளு ஓடு பதித்தால் அந்த தாக்கம் இருக்காது என்று மனத்தை தேற்றிக்கொண்டேன்.
1 லகரம் செலுத்தி முன்பதிவு செய்துவிட்டு வந்தோம்.
வழக்கம் போல நான் மற்றவற்றை பெருமாளிடம் விட்டுவிட்டேன், உனக்கு நான் இங்கு வந்து உன்னை சேவித்து என்னுடைய வாழ்நாளை கழிக்க விரும்பினாள் இதை முடித்து கொடு என்று சொல்லிவிட்டேன்.
[pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MDc4MjMxNjkyMzgyMTUyMT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]
-
அன்பில் சுந்தரராஜ பெருமாள்
இன்று ராதாவுடைய 27வது திருமண நாள், அன்பில் சுந்தரராஜ பெருமாளை பார்க்க திருச்சியிலுருந்து மாந்துரை வழியாக அன்பில் சென்றோம். 108 திவ்ய தேசத்தில் 4வது தேசம். மின்சாரம் இல்லை, ஆனாலும் பெருமாளின் கிடந்த கோலம் அருமையான தரிசனம்.
-
பரனூர் – மறக்க முடியாத நாள்
இன்றைய நாள் ஒரு மறக்க முடியாத நாள்.
- இன்று கோகுலாஷ்டமி
- முதன் முறையாக கிருத்திகா, பார்த்தா மற்றும் மீராவுடன் பரனூர் சென்றது.
- என்னுடைய குருவான திரு ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவை நந்த உற்சவத்தில் கண்டு களித்தது
- முதன் முறையாக தைரியமாக அண்ணாவிடம் சென்று அவர் மீது வெண்ணை தடவி அவரிடம் கொஞ்சம் கொடுத்து அதை அவர் என் மார்பில் அடித்தது
- கிருத்திகாவுக்கு அண்ணா கன்னத்தில் வெண்ணை அப்பி விட்டது, அதை ஏற்றதும் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி மற்றும் பெருமிதம்
- பார்த்தா மற்றும் மீரா அண்ணாவை சேவித்து ஆசிர்வாதம் பெற்றது.
- நெடு நாளைக்கு பிறகு தமிழில் நாட் குறிப்பு எழுத ஆரம்பித்தது.
நான் அண்ணாவை முதன் முறையாக தரிசித்த நாள் தெளிவாக நினைவில் இல்லை, அது இன்றும் ஒரு குறை, அது கிருத்திகா, பார்த்தா மற்றும் மீராவுக்கு பதியவேண்டும் என்ற எனது அவா இந்த நாட் குறிப்பின் மூலம் நிறைவேறுகிறது.
-
ஸ்ரீரங்க வாசம் – 3
எஸ்பிஸ் விஸ்வம்பரா பற்றி முதலில் குறிப்பிட்டதால் அதை பற்றி கருத்துக் கேட்டேன், அவர் தன்னுடைய நண்பர் ரவிச்சந்திரன் தான் அதனுடைய உரிமையாளர் என்றும் அவரிடம் பேசிவிட்டு அவருடைய அலைபேசி எண்னை தந்து பேசும்படி சொன்னார்.
மாமாவிடம் அந்த எண்ணை தந்து நேரம் கிடைக்கும்போது பேசி சதுர அடி விலையை குறைக்க முயற்ச்சிக்க சொன்னேன்.
-
ஸ்ரீரங்க வாசம் – 2
ராதா மாலை அலுவலகத்தில் இருக்கும் போது அலைபேசியில் அழைத்து மாமா ஸ்ரீரங்கத்தில் சில அடுக்குமாடி குடியிருப்புகளை பார்த்ததாகாவும் அவற்றில் விஸ்வம்பரா கட்டட நிறுவனத்தின் ‘விஸ்வருபா’ என்ற திட்டப்பணியும் கட்டுமானத்தின் தரமும் நன்றாக இருப்பதாகவும், ஸ்ரீரங்கநாதரின் ராஜ கோபுரம் வீட்டில் இருந்து பார்க்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் சதுர அடி ரூ. 4,100 யும் குறைந்த் பட்சம் 1,300 சதுர அடி ஆன வீட்டிற்கு வரவு செலவு திட்டம் ரூ 60 லகரம் ஆகும் என்றும் தெரிய வந்தது. மாமா சதுர அடி ரூ. 3,800 அந்த இடத்திற்கு தகும் என்றார்.
விஸ்வருபா திட்டப்பணி அவர்களது இணையதளத்தில் விரிவாக பிரசுரிக்கப் பட்டிருந்த்தது. கோவிலுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, இணைக்கப்பட்டிருந்த் புகைப்படங்கள் விரிவாகவும் ஸ்ரீரங்கநாதரின் ராஜ கோபுரத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள்.
ஸ்ரீரங்க வாசம் ஆசை மீண்டும் அதிகமாகியது. ஆனால் எனது வரவு செலவு திட்டம் ரூ 30 லகரம், இதுவோ ரூ 30 லகரம் மேலும் அதிகம்.
